Published : 30 Apr 2020 08:21 PM
Last Updated : 30 Apr 2020 08:21 PM

டிக் டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு உதவிய மதுரை இளைஞர்

அலங்காநல்லூர்

டிக் டாக் செயலி மூலம் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு உதவிய மதுரை இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 27-ல் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள், முறைசாரா தொழிலாளர்கள் என பல்வேறு தர்ப்பினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மாற்றுத்திறனாளிகளும் விதிவிலக்கல்ல. அவர்களும் பரவலாகப் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் டிக்டாக் நண்பர்கள் குழு சார்பாக நலிந்த ஏழை குடும்பத்தினர்கள், மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், தலா 20 கிலோ அரிசி, 1 மாதத்திற்கு தேவையான பலசரக்கு வகைகள், காய்கறிகள், பண உதவி, முக கவசம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் பகுதியில் வறுமையில் வாடும் ஏழைக் குடும்பங்களைப் பற்றி டிக்டாக் செயலி மூலம் மனோஜ் குமார் என்பவர் வீடியோ வெளியிட்டார். அதில், தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என பதிவு செய்திருந்தார்.

இதைப் பார்த்த அவரது டிக்டாக் நண்பர்கள் மற்றும் லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடு வாழ் டிக்டாக் நண்பர்கள் தகவலறிந்து பலர் உதவிக்கரம் நீட்டினர்.

இதன் மூலம் கிடைத்த பணம் ரூ.65 ஆயிரத்து 300 ரூபாய் வைத்து பண உதவியாக 30 ஆயிரம் மற்றும் பொருட்கள் உதவியாக 35 ஆயிரத்து 300ம் வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் அனைத்து பொருட்களும் அந்ததந்த குடும்பங்களுக்கு முறையாக சேர்த்த அந்த இளைஞர் மனோஜ்குமார் டிக் டாக் மூலம் நண்பர்களிடம் பதிவிட்டு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

டிக்டாக் செயலிமூலம் தற்போதய காலத்தில் எதை எதையோ தவறாக சித்தரித்து பரப்பி வரும் சூழ்நிலையில் அலங்காநல்லூரில் இது மாதிரி டிக்டாக் நண்பர்கள் மூலம் உதவி செய்திருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x