தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க மஞ்சள் நீராட்டு விழாவுக்கு குடையுடன் வந்த உறவினர்கள்

மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்குக் குடையுடன் வந்த உறவினர்கள்.
மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்குக் குடையுடன் வந்த உறவினர்கள்.
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் மஞ்சள் நீராட்டு விழாவில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக உறவினர்கள் குடையுடன் வந்தனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் வசித்து வருபவர் முருகன். இவர், அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவரது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா இன்று (ஏப்.30) அவரது வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உறவினர்கள் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில், முகக்கவசங்களை அணிந்த படி குடைகளை விரித்தபடி சீர்வரிசை எடுத்து வந்தனர்.

குடைகளை விரித்தபடி வரும் போது ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடித்தே ஆக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அவர்கள் குடையை பிடித்து வந்ததாக தெரிவித்தனர். மேலும், விசேஷ வீட்டில் நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் கைகளை கழுவ மஞ்சள் கலந்த தண்ணீருடன் கிருமி நாசினி, சோப் ஆகியவை வாசலில் தரப்பட்டன.

தொடர்ந்து உணவு பரிமாறப்பட்ட போதும் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் கிராம மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in