ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் முறைகேடாக ஆலைகள் இயக்கம்?- நொய்யலில் பாய்ந்தோடிய சாயக் கழிவுநீர்

திருப்பூர் மாணிக்காபுரம்புதூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் நேற்று சென்ற சாயக் கழிவுநீர்.
திருப்பூர் மாணிக்காபுரம்புதூர் பகுதியில் நொய்யல் ஆற்றில் நுரையுடன் நேற்று சென்ற சாயக் கழிவுநீர்.
Updated on
1 min read

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்று சாயக்கழிவு நீர் பாய்ந்தோடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மழை காரணமாக சாயக் கழிவுநீர் கலந்து ஒடியதா அல்லது முறைகேடாக சாலை ஆலைகள் இயங்கியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் ஓடாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.

திருப்பூர் மாணிக்காபுரம்புதூர் பகுதியில் நேற்று காலை சாயக்கழிவுநீர், நுரையுடன் பாய்ந்தோடியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் சில சாய ஆலைகள் முறைகேடாக இயங்குகின்றன. திருப்பூரில் மழை பெய்த நிலையில், சாயக்கழிவுநீரை நொய்யலாற்றில் திறந்துவிட்டுளளன. இதுதொடர் பாக சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கூறும்போது, "சாய ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மழை நேரத்தில் வழக்கமாக செல்வதைப்போல நொய்யலில் தண்ணீர் சென்றிருக்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in