

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 3000 பேருக்கு உதவிப்பொருட்களை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
திண்டுக்கல் அருகேயுள்ள சீலப்பாடி கிராமத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட சீலப்பாடி, ரெங்கநாதபுரம், நந்தவனப்பட்டி, சாலைப்புதூர், என்.எஸ்.நகர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளை சேர்ந்த 3000 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைபொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் நாற்காலிகள் போடப்பட்டு பொதுமக்களை அமரவைத்து உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டுவருவதாக செந்தில்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.