Last Updated : 29 Apr, 2020 07:57 PM

 

Published : 29 Apr 2020 07:57 PM
Last Updated : 29 Apr 2020 07:57 PM

சிவகங்கையில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் நடந்த ஆலோசனைக் கூட்டம்: சர்ச்சையில் பால்வள அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பால்வள அதிகாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

திருப்புவனம் அருகே மணல்மேடு கிராமத்தில் 100 மேற்பட்ட கறவை மாடுகள் உள்ளன. இங்கு கறக்கப்படும் பால் திருப்புவனம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் கோடை வெயில் தாக்கத்தால் மாடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் பால் உற்பத்தி குறைந்தது.

இதையடுத்து மானாமதுரை சரக பால்வள துணைப்பதிவாளர் புஷ்பலதா தலைமையில் கால்நடை வளர்ப்போர் ஆலாசனைக் கூட்டம் மணல்மேடு கிராமத்தில் நடத்தப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்கள், ஆவின் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஏற்கனவே இந்த கிராமத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், வெளியூர் நபர்கள் வருவதை தடுக்க சாலைகளை முட்களை கொண்டு மக்கள் அடைத்தனர்.

இந்நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டியதாக கிராமமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மானாமதுரை சரக பால்வள துணைப்பதிவாளர் புஷ்பலதா கூறுகையில், ‘ வெயில் தாக்கத்தால் சில கால்நடைகள் பாதிக்கப்பட்டன. இதனால் கால்நடைகளுக்கு மருந்துகளை கொடுக்க சென்றோம்.

அப்போது கால்நடைகளை பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு மருத்துவர்கள் விளக்கினர். ஆனால் இச்சமயத்தில் அனுமதி இல்லாததால் கூட்டம் எதுவும் நடத்தவில்லை,’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x