நெல்லையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனை

நெல்லையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனை
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சியில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தினமும் பணிக்கு செல்லும் முன் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

திருநெல்வேலி மாநகரில் மேலப்பாளையம், டவுன், பேட்டை பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 63 பேரில் 58 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பகுதிகளில் தூய்மை பணியாளர்களும் மற்றும் சுகாதார பணியாளர்கள் தினமும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் பணியில் ஈடுபடுமுன் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் மண்டல அலுவலகங்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுபோல் அவ்வப்போது மருத்துவர்களும் இவர்களது உடநிலையை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in