கோவில்பட்டியில் உள்ள தீக்குச்சி ஆலை ஒன்றில் குறைந்த அளவில் உற்பத்தியாகும் தீக்குச்சிகள்.
கோவில்பட்டியில் உள்ள தீக்குச்சி ஆலை ஒன்றில் குறைந்த அளவில் உற்பத்தியாகும் தீக்குச்சிகள்.

தீக்குச்சிகள் இருப்பு இல்லாததால் தீப்பெட்டி ஆலைகள் மூடப்படும் அபாயம்

Published on

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டி ருந்த தீப்பெட்டி ஆலைகள் இயங்க சமீபத்தில் அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், தேவையான தீக்குச்சிகள் இல்லாததால் ஆலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

இதுகுறித்து கோவில் பட்டியைச் சேர்ந்த தீக்குச்சிகள் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆர்.விக்னேஷ்வரன் கூறும்போது, எங்களிடமிருந்த மரத்தடிகளைக் கொண்டு தீக்குச்சிகள் தயாரித்து தீப்பெட்டி ஆலைகளுக்கு வழங்கிவிட்டோம். இதனை வைத்து ஒரு வாரம் கூட ஆலைகளை இயக்க முடியாது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து மரத்தடிகளை லாரிகளில் கொண்டு வர தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் கூறுகையில், தீப்பெட்டி தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான குளோரைடை புதுச்சேரியில் இருந்து கொண்டு வர வேண்டும். அது வெடிபொருட்கள் பட்டியலில் உள்ளது. எனவே, அதை புதுச்சேரியில் இருந்து தீப்பெட்டி ஆலை களுக்கு கொண்டு வரவும் அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in