

கரோனா ஊரடங்கு முடிந்த பிறகும் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
மதுவால் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிகின்றன. பெண்கள் தங்கள் உழைப்பால் மட்டுமே குடும்பத்தை நடத்தும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மதுவிலக்கு கோரிக்கை எழும்போதெல்லாம், மதுவுக்கு அடிமையானவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்றுகூறி மதுக் கடைகளை மூட தமிழக அரசு மறுத்து வந்தது. கடந்த ஒரு மாதமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால், தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு இது. இதனைப் பயன்படுத்தி ஊரடங்கு முடிந்த பிறகும் மதுக்கடைகளை திறக்காமல், நிரந்தரமாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.