

போராட்டம் நடத்தியவர்களை அகற்றாமல், என்னை கையெ ழுத்து போட வரவிடாமல் போலீ ஸார் சதி செய்தது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
உயர் நீதிமன்றம் அளித்த உத்தர வின்பேரில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத் திட்டபின் அவர் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியது:
உயர் நீதிமன்ற உத்தரவின்படி கையெழுத்திட வந்தேன். இதைத் தடுக்க வேண்டும் என போலீஸார் சதி செய்தனர். கூலிக்கு அழைத்து வந்திருந்த 20 பேர் போராட்டம் என்ற பெயரில் கூடியிருந்தனர். அவர்களை போலீஸார் ஒரு நிமிடத்தில் அகற்றிவிட்டு, என்னை சரியான நேரத்துக்கு கையெழுத் திட ஏற்பாடு செய்திருக்கலாம். நேற்று விமான நிலையம் முதல் நான் தங்கியுள்ள இடம்வரை போலீஸார் பாதுகாப்பு அளித்த னர். இன்று பாதுகாப்பு அளிக்க வில்லை. ஒரு மணி நேரம் காக்க வைத்து, வராதீர்கள் என்றனர். நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்கிறோம் என்றனர். ஆனால் சொன்னபடி எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதற்கு மேல் காக்க முடியாது என சொல்லி புறப்பட்டேன். வழியில் அரை மணி நேரம்வரை எனது காரை நிறுத்திவிட்டனர்.
இளங்கோவன் பயந்துபோய் கையெழுத்துபோட தாமதமாக வந்தார் என காட்டவே போலீஸார் சதி செய்தனர். ரூ.100 சம்பளம் கொடுத்து சிலரை அமைச்சர் அழைத்துவந்து போராட செய் துள்ளார். அவர்களை அகற்றி நடவடிக்கை எடுப்பதை விடுத்து, என்னை காக்கவைத்து வேறு வழியாக போங்கள் என போலீ ஸார் கூறுகின்றனர். என்னை காக்க வைத்தது குறித்து வழக்கறிஞர் களுடன் ஆலோசித்து நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு செல்வேன். காவல் நிலையத்தில் எனக்கு அமர நாற்காலிகூட தரவில்லை. அவர்களுக்குத் தெரிந்த மரியாதை அவ்வளவு தான்.
காலம் மாறும். மற்றவர்களை உட்காரச் சொல்ல முடியாத வர்களும் உட்கார முடியாத நிலை ஏற்படும். நீதிமன்ற உத்தரவின்படி கையெழுத்திட்டு என் கடமையை நிறைவேற்றியுள்ளேன் என்றார்.
இளங்கோவனுடன் திமுகவினர் சந்திப்பு
தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டபின் திருப்பாலையிலுள்ள கட்சியின் மாவட்டத் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜின் வீட்டுக்கு இளங்கோவன் சென்றார். அங்கு மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலர்கள் கோ.தளபதி, வி.வேலுச்சாமி, மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் பெ.குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் இளங்கோவனை சந்தித்தனர். அப்போது அதிமுகவினரின் போராட்டம், போலீஸார் பாதுகாப்பு குறித்து இளங்கோவன் கவலை தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் திமுகவினர் பாதுகாப்பு அளிப்பது குறித்தும் கட்சியினர் விவாதித்துள்ளனர். திமுக தலைமை உத்தரவின்பேரிலேயே இளங்கோவனை சந்தித்ததாக கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.