

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுக்கும்வகையில் களப் பணியில் உள்ள போலீஸாருக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்குவது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
போலீஸாரை கரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கு, காவல் ஆணையர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தொடர் பணியால் போலீஸார் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அஜாக்கிரதையாக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தடுக்கும் வழிமுறை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிகாரிகளின் அலுவலகத்தில் பணிசெய்து வரும் போலீஸார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் பணி, மறுநாள் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் களப்பணியில் உள்ள போலீஸாருக்கும் ஒரு நாள் பணி, மறுநாள் ஓய்வு வழங்குவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.