தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் பால்கனி அரசுகள்: கமல் காட்டம்

தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் பால்கனி அரசுகள்: கமல் காட்டம்
Updated on
1 min read

தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் பால்கனி அரசுகள் என்று கமல் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் ஒருவழியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வையும் ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்கமாகப் பெறும் ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டுக்கும், அகவிலைப்படி உயர்வை 2021-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பாதிக்கும் எதையும் செய்யக் கூடாது என்கிறார் பிரதமர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் பால்கனி அரசுகள்"

இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பண மதிப்பிழப்பு தொடர்பான நடவடிக்கை போலவதான் இந்த ஊரடங்கும் என்று கடுமையாக விமர்சனம் செய்து பிரதமர் மோடிக்கு கமல் கடிதம் எழுதியிருந்தது நினைவு கூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in