சேலத்தில் கரோனா தொற்று பரவிய இடங்களில் உள்ள 1.81 லட்சம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்க ஏற்பாடு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சேலம் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள 42 ஆயிரத்து 252 குடியிருப்புகளில் வசிக்கும் 1 லட்சத்து 81 ஆயிரத்து 618 பொதுமக்களுக்கும் மற்றும் மீதமுள்ள 41 கோட்டங்களிலும் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக, மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சேலம், கொண்டலாம்பட்டி மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்ட 58-வது கோட்டத்தில் இன்று (ஏப்.28) நடைபெற்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் முகாமில் மாநகராட்சி ஆணையர் சதீஷ் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 19 கோட்டங்களில் கரோனா தொற்று பரவியதால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் தினம் தோறும் சென்று கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கரோனா தொற்று பரவிய இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் ஜிங்க் மாத்திரைகள் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள், நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சதீஷ் கூறியதாவது:

"முதல்கட்டமாக நேற்று தூய்மைப் பணியாளர்கள், கிருமி நாசினி மருந்து தெளிப்பாளர்கள், கணக்கெடுப்பாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் மற்றும் சளி மாதிரி எடுப்பவர்கள் என மொத்தம் 1,272 களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள 42 ஆயிரத்து 252 குடியிருப்புகளில் வசிக்கும் 1 லட்சத்து 81 ஆயிரத்து 618 பொதுமக்களுக்கும் மற்றும் மீதமுள்ள 41 கோட்டங்களிலும் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in