கரோனா நோயாளிகளுக்கு தனி ஆம்புலன்ஸ்; 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கரோனா நோயாளிகளுக்கு தனி ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுவதாக, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கிருமிநீக்கம் செய்யாமலேயே, இதர நோயாளிகளுக்கும் பல்வேறு இடங்களில் பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையடுத்து, "கரோனா தொற்று உள்ளவர்களுக்கு என தனியாக 108 ஆம்புலன்ஸ்களை ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் ஆம்புலன்ஸைப் பயன்படுத்திய பிறகு முழுமையாக கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் 108 ஆம்புலன்ஸ் மூலம் இதர நபர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.

இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும்" என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சில நாட்களுக்கு முன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், நம் 'இந்து தமிழ் திசை' வாசகர் சரவணன், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வைரலாகியுள்ளது.

அதில் இந்த விவகாரம் குறித்து பெண் ஊழியர் கூறும்போது, "கரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்குத் தனி ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கென தனி ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in