

கன்னியாகுமரி மாவட்டம் தேங் காய்ப்பட்டினம் அருகே உள்ள முள்ளூர்துறை மீனவ கிராமத்தில் கடந்த 25-ம் தேதி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களைப் போலீஸார் கண்டித்தபோது, மோதல் ஏற் பட்டது.
போலீஸார் மீது இளை ஞர்கள் கல்வீசி தாக்கினர். காவல் துறையின் இரு வாக னங்களின் கண்ணாடிகள் சேதப் படுத்தப்பட்டன. இதில் புதுக் கடை எஸ்.ஐ. இளங்கோ உட்பட இரு போலீஸார் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக முள் ளூர்துறையைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 31 பேர் தேடப்படுகின்றனர்.
அமைதி காக்கும்படி போலீ ஸார் மற்றும் முள்ளூர் துறை பங்குத் தந்தையர் பொதுமக் களிடம் வலியுறுத்தினர். முள் ளூர்துறையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.