

தமிழக அரசியல் தொடர்பாக வெளியான கருத்துக் கணிப்பு நியாயமாக நடத்தப்படவில்லை. ஒரு சிலரின் தூண்டுதலால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு. அதை காங்கிரஸ் நம்பவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நிபந்தனையின்பேரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று 4-வது நாளாக மதுரை தல்லா குளம் காவல் நிலையத்தில் கையெழுத் திட்டார். பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசியல் நிலவரம் குறித்து நேற்று முன்தினம் வெளியான இந்த கருத்துக் கணிப்பு சிலரின் தூண்டுதலின்பேரில் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக கருத்துக் கணிப்புகளை காங்கிரஸ் கட்சி நம்புவதில்லை. இந்த கருத்துக் கணிப்பு நியாயமாக நடத்தப்படவில்லை. சிலரை திருப்திபடுத்துவதற்காகவே நடத்தப்பட்டுள்ளது. எனவே இந்த கருத்துக் கணிப்பை நம்பவில்லை.
தமிழக நிலவரம் குறித்து கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் அடிக்கடி தொலைபேசியில் தெரிவித்து வருகிறேன். காங்கிரஸ் கட்சியில் மேலிடத் தலைவர்களை சந்திப்பது பெரிய விஷயம் அல்ல. எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
தமிழக காங்கிரஸில் ஒருசில தலைவர்கள் எதிர்கருத்துகளை தெரிவிப்பது குறித்து கவலைப் படவில்லை. நூறு சதவீத தொண்டர்கள் என் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடைந்து வருகிறது. நான் தொண்டர்களுடன் தொண்டராக இருந்து வருகிறேன்.
ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக கார்த்திக் சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கை அவர் சட்டப்படி சந்திப்பார்.
இந்தியாவில் தமிழகத்தில் ஆதி திராவிடர்கள், சிறுபான்மையினர் களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடைபெறுகின்றன. இதை காங்கிரஸ் கட்சி கண்டிக் கிறது. இந்த சம்பவங்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார்.