Published : 28 Apr 2020 07:50 AM
Last Updated : 28 Apr 2020 07:50 AM

கள்ளிக்குடி வணிக வளாகத்தில் அனுமதி கிடைக்காத நிலையில் கிராமப்புற விவசாயிகள் அமைத்த சந்தை: காலை 10 மணிக்குள் 5 டன் காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன

திருச்சி

திருச்சி மாவட்டம் கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் அனுமதி கிடைக்காத நிலையில் கிராமப்புற விவசாயிகள் நேற்று அமைத்த சந்தையில் காலை 10 மணிக்குள் 5 டன் எடையுள்ள காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன.

திருச்சியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு, தற்காலிக காய்கறி சந்தைகளில் மக்கள் காய்கறிகளை வாங்கி வருகின்றனர்.

இந்த தற்காலிக காய்கறி சந்தைகளும் அண்மைக் காலமாக வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே இயங்குகின்றன.

சமூக இடைவெளி இல்லாத நிலையில் காந்தி மார்க்கெட் மொத்த விற்பனை அரிய மங்கலம் பழைய பால் பண்ணை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அணுகுசாலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், போதிய சமூக இடைவெளியின்றி ஆயிரக் கணக்கானோர் அங்கு கூடியதன் காரணமாக சமயபுரம் ஆட்டுச் சந்தைக்கு மொத்த விற்பனை மார்க்கெட்டை இடம்மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.

காந்தி மார்க்கெட் காய்கறி மொத்த விற்பனைக்காக மணிகண்டம் வட்டம் கள்ளிக் குடியில் கட்டப்பட்ட மத்திய வணிக வளாகத்துக்கு செல்ல மறுத்ததுபோலவே, சமயபுரத்துக் கும் செல்ல முடியாது என மொத்த வியாபாரிகள் மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் என்.நடராஜன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நேற்று முன்தினம் முதல் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியில் மொத்த விற்பனை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, காந்தி மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் செல்ல மறுத்த கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் தங்களுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும் என்று கோரி திருச்சி மாவட்ட மனித வளர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன், சங்கச் செயலாளர் கு.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மனு அளித்தனர். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று காலை கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தின் முன்புறம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த காய்கறி களுடன் சந்தை அமைத்தனர். விவசாயிகள் குறைந்த விலை யில் காய்கறிகளை விற்க உள்ளது குறித்து ஏற்கெனவே கேள்விப்பட்ட மணிகண்டம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

விலை நிர்ணயித்த விவசாயிகள்

இதுதொடர்பாக கு.ப.கிருஷ் ணன் கூறியது:

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு தாங்களே விலையை நிர்ணயித்து மக்க ளிடம் நேரடியாக விற்பனை செய்துள்ளனர். இதனால், மிகக் குறைந்த விலைக்கு காய்கறிகள் கிடைத்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். வியாபாரிகளிடம் காய்கறிகளை விற்றால் கிடைப்பதை விட சற்று அதிக விலை கிடைத்ததால் விவ சாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 51 விவசாயிகள் அமைத்த 32 கடைகளின் மூலம் 4,962 கிலோ, கிட்டத்தட்ட 5 டன் காய்கறிகள் அனைத்தும் காலை 10 மணிக்குள் விற்றுத் தீர்ந்தன. இந்த விற்ப னையின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.57,000 கிடைத்துள்ளது.

மொத்த விற்பனை விலைக்கே

நாளை(இன்று) முதல் கள்ளிக் குடி விவசாயிகள் சந்தையில் சிறு வியாபாரிகள், ஜி கார்னர் மொத்த விற்பனை சந்தை விலைக்கே காய்கறிகளை வாங்கிச் செல்லலாம்.

அதேபோல, கள்ளிக்குடிக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவரும் விவசாயிகளின் எண்ணிக்கையும், வாங்கவரும் மக்கள் எண்ணிக்கையும் நாளுக் குநாள் அதிகரிக்கும் என்று நம்பு கிறோம் என்றார்.

தேங்காய் ரூ.10, ஒரு கிலோ தக்காளி ரூ.7

திருச்சி மாநகர காய்கறி சந்தைகளில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படும் தேங்காய் கள்ளிக்குடி விவசாயிகள் சந்தையில் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்பட்டது. இதேபோல, கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படும் தக்காளி கிலோ ரூ.7-க்கு மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டது. கத்தரிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளும், பல்வேறு கீரைகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x