Published : 28 Apr 2020 07:44 AM
Last Updated : 28 Apr 2020 07:44 AM

சென்னையில் தன்னார்வலருக்கு கரோனா பாதிப்பு: 40 போலீஸார் உட்பட 100 பேருக்கு பரிசோதனை

சென்னையில் தன்னார்வலருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்த 40 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தன்னார்வலர் ஒருவர் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸார், தூய்மைப் பணியாளர்கள் மற்றும்சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு உணவு, தேநீர் போன்றவற்றை வழங்கி வந்துள்ளார். வெளியில் சுற்றி உணவுகளை வழங்கி வருவதால், அவர் தன்னைபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இதில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் சென்னைஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 40-க்கும் மேற்பட்ட போலீஸார், தூய்மைப் பணியாளர்கள், சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் என 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், காசிமேட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும், கோயம்பேடு மார்க்கெட்டில் 2 வியாபாரிகள் மற்றும் சலூன் கடை நடத்தி வருபவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல் ஆணையர் அறிவுரை

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தன்னார்வலரிடம் உதவி மற்றும் உணவு பெற்ற காவல்துறையினர் உட்பட அனைவரும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள காவலர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் எனவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x