Published : 28 Apr 2020 07:38 AM
Last Updated : 28 Apr 2020 07:38 AM

வெப்பநிலை குறைவாக உள்ள பகுதிகளில் கரோனா வேகமாக பரவும்: சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தகவல்

சென்னை

சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

கரோனா வைரஸ், வெப்பநிலை குறைவாக இருக்கும் இடங்களில் வேகமாக பரவுமா என்பது குறித்துசென்னை ஐஐடி மூத்த பேராசிரியர் சச்சின் குந்தே தலைமையிலானகுழு ஆய்வு மேற்கொண்டது. இதற்காக கரோனா பாதிப்பு தொடர்பான 1.70 லட்சம் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, வெப்பநிலை குறைவாக உள்ள இடங்களில் கரோனாவைரஸ் வேகமாகப் பரவும். வெப்பநிலை மற்றும் புறஊதாகதிர்வீச்சு அதிகம் உள்ள இடங்களில் பாதிப்பு குறைவாக இருக்கும். செயற்கையாக புறஊதா கதிர்களை உருவாக்கினால் சமூக பரவலைத் தடுக்கலாம். இந்தஆய்வு முடிவுகள் கரோனா பாதிப்பு தொடர்பான தரவுகளின்அடிப்படையிலேயே கண்டறியப் பட்டுள்ளன. எனவே, உடலியல் ஆய்வுக்குப் பின்னரே இதை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x