

உஜ்வாலா திட்டத்தின்கீழ், இலவச காஸ் சிலிண்டர் பெற இன்றைக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ், இலவச சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, இம்மாதத்துக்கான இலவச காஸ் சிலிண்டர் வாங்குவதற்காக உஜ்வாலா திட்டப் பயனாளிகளின் வங்கிக் கணக்கு களில் அதற்கான முழுத் தொகை யையும் எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் செலுத்தின.
வங்கிக் கணக்கில் வரவு
இதன்படி, தமிழகத்தில் உள்ள 16.7 லட்சம் திட்டப் பயனாளிகளில் 96 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பட்டுள்ளது.
இதனால், இம்மாதத்துக்கான காஸ் சிலிண்டர் வாங்காதவர்கள், இன்றைக்குள் பதிவு செய்து சிலிண்டர் வாங்கினால் மட்டுமே அடுத்த மாதத்துக்கான இரண்டா வது சிலிண்டருக்கான பணம் கிடைக்கும் என எண்ணெய் நிறு வன அதிகாரிகள் தெரிவித்தனர்.