

கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக மருத்துவர்கள் பலரும் நேரடி மருத்துவ சேவை செய்ய இயலாமல் பல்வேறு வகையான உபாயங்களை நாடுகிறார்கள். பெரும்பாலான மருத்துவர்கள் வாட்ஸ் அப் மூலம் மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் சிதம்பரத்தைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் இருவர் வாட்ஸ் அப் மூலமாக இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்க முன் வந்திருக்கிறார்கள்.
சிதம்பரம் கீழ சன்னிதியில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ், டாக்டர் ரவிகிருஷ்ணா ஆகிய இருவர்தான் அந்த மருத்துவர்கள். இவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் தினமும் காலை 10- 12 மணிக்குள், 94421 24185 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் வழியே தொடர்புகொண்டு தங்களது பெயர், வயது, மற்றும் நோய் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இப்படிப் பதிவு செய்தவர்களுக்கு தினமும் மாலையில் 6 மணியில் இருந்து 8 மணி வரை, மருத்துவர்கள் இருவரும் ஆலோசனை வழங்குவார்கள். அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும் பரிந்துரை செய்வதுடன், தேவைப்பட்டால் காணொலி வழியாகவும் நோயாளிகளிடம் உரையாடுவார்கள்.
இவ்வாறு மருத்துவர்கள் இருவரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.