

வருமானவரி தாக்கல் செய்வதற்காக சென்னையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் இன்று முதல் சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்கப்படுகின்றன.
வருமான வரித்தாக்கல் செய்வதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் சிறப்புக் கவுன்ட்டர்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. 31-ம் தேதி வரை இக்கவுன்ட்டர்கள் செயல்படும். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இவை செயல்படும். மாத சம்பளம் பெறுபவர்கள், ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறும் ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் இவற்றில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.
மேலும், மூத்தக் குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கென பிரத்யேக கவுன்ட்டர்கள் அமைக் கப்பட்டுள்ளன. வரி செலுத்துவதற்கு வசதியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கவுன்ட்டர் களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கூடுதல் தகவல்கள் அறிய 044-28338314 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.