பழநி அருகே மார்க்கெட்டில் விளைபொருட்களை விற்றுவிட்டு திரும்பிய விவசாயிக்கு அபராதம்

பெரியசாமி
பெரியசாமி
Updated on
1 min read

பழநி அருகே வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி. இவர், நேற்று முன்தினம் தோட்டத்தில் விளைந்த மிளகாய்களை பறித்து பழநி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வேலம்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது தொப்பம்பட்டியில் அவரை கீரனூர் போலீஸார் நிறுத்தி விசாரித்தனர். விளை பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்றுவிட்டு வருவதாகக் கூறி, கமிஷன் கடை ரசீதை பெரியசாமி காட்டியுள்ளார். ஆனால், அவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததாகக் கூறி பெரியசாமிக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். இந்நிலையில் வீட்டுக்குச் சென்ற பெரியசாமி, வாட்ஸ்அப்பில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

விளைபொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு தடை யில்லை என்று தமிழக முதல்வர் அறிவித்த பின்பும், இதுபோன்று போலீஸார் கெடுபிடி காட்டுவது எந்தவிதத்தில் நியாயம்? போலீஸார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு விவசாயிகளை ஒடுக்கினால், சாகுபடி பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் என்றார்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சக்திவேல் கூறியதாவது: வழக்கமான வாகனச் சோதனையின்போது விதிக்கப்படும் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கான அபராதத்தைத்தான் போலீஸார் விதித்துள்ளனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in