

மதுரை பத்திரிகையாளர் சங் கத்தில் செய்தியாளர்களுக்கு முகக் கவசம், கை சுத்திகரிப்பான் திரவத்தை வழங்கி அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பேசியதாவது: கரோனா வைரஸை தடுக்கும் முறை குறித்து உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறையும் ஆய்வு செய்து வருகிறது. சிரமப்பட்டு செய்திகளை சேகரித்து மக் களிடம் சேர்க்கும் மதுரை பத்திரிகையாளர்களின் பணி, எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. இந்த நேரத்தில் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் பணியை பிற மாவட்டங்கள் பாராட்டுகின்றன.
வருவாய், உள்ளாட்சித்துறை, பொது விநியோகம், நெல் கொள் முதல் போன்ற அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடக்கின்றன.வல்லரசு நாடுகளை ஒப்பி டும்போது, இந்தியாவில் நோய்த் தொற்றின் தாக்கம் குறைவுதான்.
தமிழகத்தில் நோய் தடுக் கும் பணியில் முதல்வர் தலைமையிலான குழு முன் மாதிரியாகவும், உலகத்துக்கே இந்தியா முன்னுதாரணமாகவும் செயல்படுகிறது என்றார்.
ஆட்சியர் டிஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசா கன், வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந் துகொண்டனர்.