

விருதுநகர் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு என்-95 தரத்திலான முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு பணியாற்றும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு உரிய பாது காப்பு உபகரணங்கள் வழங் கப்படவில்லை என்று புகார் எழுந் துள்ளது.
தற்போது விருதுநகரில் உள்ள அரசு செவிலியர் பயிற்சி பள்ளி யைச் சேர்ந்த 300 பேர், 3 ஷிப்ட்களில் மருத்துவமனை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றி வருவதால், கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.
இதுகுறித்து, செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் சிலர் கூறுகையில், எங்களுக்கு ஓரடுக்கு கொண்ட ஒரு முறை மட்டுமே அதுவும் 3 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களே வழங்கப்பட்டுள்ளன. அதனால், அதன் மீது நாங்கள் துணியாலான முகக் கவசங்களைச் சேர்த்து அணிந்து கொள்கிறோம். பலருக்கு கையுறைகள் வழங்கப்படவில்லை. உடனடியாக போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று கூறினர்.