

கன்னியாகுமரி மாவட்ட எல்லை யோரத்தில் அமைந்துள்ள திரு நெல்வேலி மாவட்டத்தைச் சேர் ந்தோர் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கும், அரசு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் சென்று வந் தனர். ஊரடங்கு அமல்படுத்தப் பட்ட பின் மாவட்டத்தைவிட்டு மாவட்டம் செல்ல ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அனு மதியைப் பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டதால் திருநெல்வேலியைச் சேர்ந்த பலர் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டனர். இது குறித்து ராதாபுரம் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிர பாகர் சதீஷின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
இதையடுத்து திருநெல்வேலி - கன்னியாகுமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு சோதனைச்சாவடியில் தனியாக பிரவுசிங் மையத்தை உருவாக்கி, அதில் 4 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை ஆட்சியர் பணியமர்த்தியுள்ளார். அவசர மருத்துவ சிகிச்சைக்கு மாவட் டம்விட்டு மாவட்டம் செல்வோர் இவர்களிடம் விண்ணப்பித்தால், ஆட்சியரிடம் உடனுக்குடன் அனுமதி சீட்டை பெற்றுத் தரு வார்கள்.
6 மணிநேரத்துக்கு ஒருவர் என்று 4 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் இந்த இ-பாஸ் வழங்கும் சேவை ஏற்படுத்தப்பட் டுள்ளது.