170 கிராமங்களில் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, மருந்து மாத்திரைகள் வழங்கிய புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டி

அரபிந்தோ சொசைட்டி ஆசிரமம்: கோப்புப்படம்
அரபிந்தோ சொசைட்டி ஆசிரமம்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் 170 கிராமங்களில் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருந்து மாத்திரைகள், உணவை அரபிந்தோ சொசைட்டி வழங்கியுள்ளது. அத்துடன் தற்போதைய முக்கியத் தேவையான என்-95, என்-99, மூன்றடுக்கு19 ஆயிரம் முகக்கவசங்களையும் பாதுகாப்பு கருவிகளையும் முதல்கட்டமாக தந்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலாகியுள்ளது. இக்கட்டான சூழலில் அரசுகளோடு இணைந்து பலரும் உதவுகின்றனர். மருந்து, மாத்திரைகள், முகக்கவசம் தொடங்கி உணவு பொருட்களை புதுச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி நிதி நிலை நிர்வாக மேலாளர் விஜய் போதார் மற்றும் அதிகாரிகள் முதல்வர் நாராயணசாமியிடம் வழங்கினர்.

அரபிந்தோ சொசைட்டி நிதிநிலை நிர்வாக மேலாளர் விஜய் போதார் கூறுகையில், "முகக்கவசங்கள் மருத்துவர்கள் மற்றும் மக்களுடன் நேரடியாக பணியாற்றுவோருக்குத் தேவை என்பதால் என்-95, என்-99 முககவசங்கள் 4,000, 3 லேயர் கொண்ட 15 ஆயிரம் முகக்கவசங்கள் என மொத்தம் 19 ஆயிரம் முகக்கவசங்களை அரசிடம் தந்துள்ளோம். அத்துடன் தனிப்பட்ட பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரண கருவிகளையும் தந்துள்ளோம்.

குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் 170 கிராமங்களில் உள்ள இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியோருக்கு மருந்து மாத்திரைகள் உணவு தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். சிறப்பு நிலை குழந்தைகளுக்கும் பல உதவிகளை செய்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in