

மதுரையில் இன்று மேலும் 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 56 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை மேலும் 4 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது.
மீனாட்சியம்மன் கோயில் பட்டர் தாய் வசித்தப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், செல்லூர் மனவாளநகரில் ஒருவருக்கும், பழங்காநத்தத்திலும் புறநகர் பகுதியில் ஒருவருக்கும் இந்த நோய் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ‘கரோனா’ பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கெனவே ‘கரோனா’வால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 43 பேருக்கு கரோனா பாதித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம்1821 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது.