Last Updated : 25 Apr, 2020 08:07 PM

 

Published : 25 Apr 2020 08:07 PM
Last Updated : 25 Apr 2020 08:07 PM

திருநள்ளாறு சனி பகவானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை யூ டியூப் மூலம் காணலாம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவானுக்கு இன்று நடைபெற்ற அபிஷேக ஆராதனை

  காரைக்கால்

திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை யூ டியூப் மூலம் பக்தர்கள் கண்டு தரிசிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக சனிக்கிழமைகளில் கூடுதலான அளவில் பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் கோயிலுக்கு பக்தர்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனி பகவானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை யூ டியூப் மூலம் பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

"கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் பக்தர்களின் வசதிக்காகவும், உலகம் இந்த நெருக்கடியான காலக்கட்டத்திலிருந்து விரைவில் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்காகவும், அனுகிரஹ மூர்த்தியான சனீஸ்வர பகவானுக்கு ஒவ்வொறு சனிக்கிழமையிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை www.thirunallarutemple.org என்ற தேவஸ்தான வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள https://www.youtube.com/channel/UCDS2fzbEm2w9GjN8QFufvlw என்ற யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பக்தர்கள் இந்த வசதியினை பயன்படுத்தி சனீஸ்வர பகவானின் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வாழ்வில் எல்லா வளமும் பெற்றிட வேண்டுகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x