திருமங்கலம் தொகுதியில் 30 ஆயிரம் காய்கறிப் பைகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விநியோகம்

திருமங்கலம் தொகுதியில் 30 ஆயிரம் காய்கறிப் பைகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விநியோகம்
Updated on
1 min read

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் காய்கறி தொகுப்பு அடங்கிய 30 ஆயிரத்திற்கும் அதிகமான பைகளை வீடுவீடாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விநியோகித்தார்.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பிலும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிச்செய்யும் ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கினார்.

தொகுதியில் உள்ள 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு காய்கறி தொகுப்பு அடங்கிய பைகளை 3 நாட்களாக வழங்கி வருகிறார்.

மதுரை மொத்த மார்க்கெட்டிலிருந்து 51 வாகனங்களில் தினசரி காய்கறி தொகுப்பு அடங்கிய 10 ஆயிரத்திற்கும் அதிகமான பைகள் திருமங்கலம் தொகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றிய பகுதிகளிலுள்ள கிராமங்கள் வாரியாக அமைச்சர் வீடு,வீடாக பைகளை வழங்கி வருகிறார். இன்று வடக்கம்பட்டி, புளியம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் விநியோகித்தார்.

அதிமுக.வினர் கூறுகையில்,‘ 3 நாட்களில் 30 ஆயிரம் பைகள் வழங்கப்பட்டுள்ளன. திருமங்கலம் நகர், ஒன்றியப் பகுதிகளில் இன்று வழங்கப்பட்டது.

இதையும் சேர்த்தால் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டும். இதைத் தவிர பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கும் தனித்தனியாக உதவிகள் அமைச்சரால் வழங்கப்படுகிறது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in