Published : 25 Apr 2020 05:30 PM
Last Updated : 25 Apr 2020 05:30 PM

கோவையில் பாஜக சார்பில் 800 குடும்பங்களுக்கு மோடி கிட்

பாஜக சார்பில் கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் திருநங்கைகளுக்கு தலா ரூ.1,000 மதிப்பிலான 'மோடி கிட்' வழங்கப்பட்டது.

பாஜக சார்பில் கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம், முத்துமாரியம்மன் கோயில் வீதி, பொன்னுசாமி வீதி, பழைய நெசவாளர் காலனி, புதிய நெசவாளர் காலனி, முருகன் மில் குடியிருப்பு, ராமலிங்கம் காலனி பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, ரவை, சேமியா, எண்ணெய் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கியுள்ள 'மோடி கிட்' தொகுப்பு மற்றும் 1,000 முகக்கவசங்கள், 500 குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் ஆகியவற்றை பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான ஜெயலட்சுமி, மாநிலப் பொறியாளர் பிரிவு முன்னாள் துணைத் தலைவர் எம்.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

தூய்மைப் பணியாளர்களைக் கவுரவித்த ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ், சேவாபாரதி, சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சார்பில் ராம் நகரைச் சேர்ந்த 105 தூய்மைப் பணியாளர்களைக் கவுரவித்து, அவர்களுக்கு மளிகைப் பொருட்கள் தொகுப்பை ஆர்எஸ்எஸ் மாநகரத் தலைவர் ராஜா, தென்பாரத சேவைப் பிரிவு அமைப்பாளர் பத்மகுமார், விவேகானந்தா சேவா கேந்திர அறங்காவலர்கள் சுனில் ரமேஷ் உள்ளிட்டோர் வழங்கினர்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் சார்பில் கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் சங்கத் தலைவர் உதயகுமார், செயலர் சந்திரபிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணைச் செயலர் மைக்கேல் ஆகியோர் வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x