

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்காக சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் ஒரு ரோபோ இயந்திரம் நேற்று வழங்கப்பட்டது.
மூன்று அடுக்கு தட்டுகளை உடைய இந்த இயந்திரம் 25 கிலோ எடையுடைய பொருட் களைக் கொண்டு செல்லும் திறனுடையது. 4 பக்கமும் சுழலக்கூடிய சக்கர வசதியுடன் கூடிய இந்த இயந்திரத்தை ரிமோட் கருவி மூலம் ஒரு கி.மீ. தொலைவு வரை இயக்கலாம்.
இந்த இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவி டம் நேற்று வழங்கிய சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைப் பதிவாளர் சுவாமி நாதன், பின்னர் கூறியபோது, “சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் முதல்கட்டமாக 20 ரோபோ இயந் திரங்கள் வடிவமைக்கப்படுகின் றன.
இவற்றில், மேலும் 4 இயந் திரங்கள் தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கும், மற்ற இயந்திரங் கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட பிற மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட உள்ளன” என்றார். அப்போது, மண்டல கரோனா தடுப்புக் குழு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.