

திருச்சி மாநகரில் உள்ள கடைவீதி களில் ஊரடங்கு உத்தரவை புறந்தள்ளிவிட்டு, மக்கள் வழக் கம் போல, பொருட்களை வாங்க கூட்டமாக வருவதைக் கட்டுப் படுத்த திருச்சியிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலை யில், அத்தியாவசியப் பொருட் களை பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ஆனால், திருச்சி மாநகரில் பெரிய கடைவீதி, மார்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஏராளமானோர் பொருட் களை வாங்க பெண்கள், குழந்தைகளுடன் வருகின்ற னர். இங்கு சமூக இடைவெளி முற்றிலுமாக கடைபிடிக்கப்பட வில்லை. பெரிய கடைவீதியில் சாலையின் இருபுறங்களிலும் பூ, பழங்கள் விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளில் எப் போதும் போல வியாபாரம் நடை பெறுகிறது. மக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கு கின்றனர். இது ஊரடங்கின் நோக்கத்தையே சிதைக்கும் விதத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து திருச்சி இன்ட்ரா சிட்டி டெவலப்மன்ட் என்டேவர்ஸ் (டைட்ஸ்) அமைப்பின் நிர்வாகி கே.ஷியாம்சுந்தர், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியபோது, “தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதித்து சிவப்பு நிறப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் திருச்சி மாவட்டமும் ஒன்றா கும். ஆனால், தமிழகத்தில் 5 மாநகராட்சிகளில் மட்டும் முழு ஊரடங்கை தமிழக முதல் வர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை திருச்சி மாநகராட்சியிலும் அமல்படுத்தி னால் மட்டுமே மக்கள் கடைவீதிகளில் அதிக அளவில் கூடுவதைத் தடுத்து, சமூக இடை வெளியைப் பேணி கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முடியும்” என்றார்.
இதுகுறித்து காவல் துறை வட்டாரங்களில் கேட்டபோது, “வீடுகளுக்கு அருகிலுள்ள கடை களில் அத்தியாவசியப் பொருட் களை வாங்கிக் கொள்ளு மாறு அறிவுறுத்தியும் பலரும், மொத்த விற்பனை கடைகளுக்கு வந்து மளிகைப் பொருட் களை வாங்கிச் செல்கின்ற னர். இதனால்தான் கடைவீதி களில் அதிக கூட்டம் கூடுகி றது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்த அறிவுறுத் தலை பெரும்பாலானோர் பின் பற்றுவதில்லை” என்றனர்.