

குமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிற்றாறில் அதிகபட்சமாக 62 மிமீ., மழை பதிவானது.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இரு நாட்களாக பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று அதிகபட்சமாக சிற்றாறு இரண்டில் 62 மிமீ., மழை பெய்திருந்தது.
பேச்சிப்பாறை 34, பெருஞ்சாணி 40, சிற்றாறு இரண்டு 42, களியல் 20, குழித்துறை 11, புத்தன்அணை 39, சுருளோடு 44, இரணியல் 13, மாம்பழத்துறையாறு 17, அடையாமடை 21, ஆனைக்கிடங்கு 16, முள்ளங்கினாவிளை 9, முக்கடல் அணை 19 மிமீ., மழை பெய்தது. மலையோரங்களில் பெய்து வரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.