

மதுரை கப்பலூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் உள்ள திறந்தவெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் ஆர.பி.உதயகுமார் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை ஆய்வு செய்தார்
அதன்பின்னர் அவர் பேசியதாவது:
கோவிட் 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கு முதல்வர் ஆணைக்கிணங்க பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் மதுரையில் நடைபெற்று உள்ளன
விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் நமது முதல்வர் விவசாய மக்களுக்காக பல்வேறு முக்கியத்தும் அளித்து வருகிறார்
மதுரையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை சேர்ந்த 87 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன
வாடிப்பட்டியில் 7 நிலையங்கள், அலங்காநல்லூரில் 6 நிலையங்கள், மதுரை கிழக்கு 5 நிலையங்கள், மதுரை மேற்கு 8 நிலையங்கள், மேலூர்12 நிலையங்கள், கொட்டாம்பட்டி 12 நிலையங்கள், திருப்பரங்குன்றம் 3 நிலையங்கள் ,திருமங்கலம் 1 நிலையங்கள், சேடப்பட்டி 1 நிலையங்கள், செல்லம்பட்டி 42 நிலையங்கள் என 87 நிலையங்களில் மேற்படி கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் 7596 விவசாயிகள் 4,629 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ததற்கு ரூ.90 கோடிக்கு மேல் பணம் வழங்கப்பட்டது
கடந்தாண்டு எடுத்துக்கொண்டால் 4424 விவசாயிகள் 3,813 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ததற்கு 70 கோடி அளவில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக விவசாயிகள் உற்பத்தி செய்துள்ளனர்
மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் தேவையான அளவில் சாக்கு பைகளும் தயார் நிலையில் உள்ளன. இங்கு பணிபுரியும் அனைவருக்கும் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
முதல்வரின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த 144 தடை காலங்களிலும் நெல் இருப்புகள் போதுமான வகையில் இருப்பு உள்ளது
இந்த சவாலான நேரத்திலும் மக்களின் அத்தியாவசிய தேவையான பொருள்களை தங்குதடையின்றி மக்களுக்கு முதல்வர் வழங்கி வருகிறார் என்று கூறினார்
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் கோட்டாட்சியர் சௌந்தரவல்லி மதுரை மண்டல மேலாளர் புகாரி உட்பட பலர் இருந்தனர்.