

மதுரை சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா மீனாட்சி கோயிலில் நாளை (ஏப்.25) கொடியேற்றத்துடன் தொடங்க வேண்டும். ஆனால் கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டுள்ளதால் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித் திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் கோயில் சன்னதி முதல் பிரகா ரத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 4-ம் தேதி நடத்தவும், இதில் 4 சிவாச்சாரி யார்கள் மட்டும் பங்கேற்கவும், இதை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளழகர் கோயில் சி்த்திரைத் திருவிழா கொட்டகை முகூர்த்தம் தல்லாகுளம் பெரு மாள் கோயிலில் நேற்று நடைபெற்றிருக்க வேண்டும். ஊரடங்கால் நடக்கவில்லை. இதை பட்டாச்சாரியார்கள் சம்பிர தாயத்துக்கு அழகர்கோயிலில் நேற்று நடத்தினர்.
ஊரடங்கு மே 3-ம் தேதி வரை அமலில் உள்ளது. கள்ளழகர் கோயில் முக்கிய திருவிழா அன்றுதான் தொடங்குகிறது. மே 3, 4-ல் கோயில் வளாகத்திலேயே கள்ளழகர் உலா வருவார். மே 5 மாலை மதுரைக்குப் புறப்படுவார். மே 6-ல் எதிர்சேவை, மே 7-ல் முக்கிய நி்கழ்வான வைகை ஆற் றில் எழுந்தருளல் நடக்கும். மே 8-ல் மண்டூக மகரிஷிக்கு சாபம் தீர்ப் பார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தெரியாத நிலையில், அழகர் ஆற்றில் இறங்குவாரா என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது. இது குறித்து கள்ளழகர் கோயில் பட்டாச்சாரியார் மற்றும் அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கள்ளழகரை வாகனத்தில் மதுரைக்கு கொண்டு சென்று, வைகை ஆற்றில் இறங்கச் செய்ய முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெறும் முயற்சி நடக்கிறது. இதன் நிலை இன்றைக்குள் தெரிந்துவிடும். அனுமதி கிடைக்காவிட்டால் வைகை ஆற்றில் இருந்து தண்ணீரை அழகர் கோவில் கொண்டு வந்து தொட்டியில் நிரப்பி, அதில் கள்ளழகரை இறங்கச் செய்யவும், கோயில் வளாகத்திலேயே மண்டூக மகரிஷிக்கு சாபம் தீர்க் கும் வைபவத்தை நடத்தலாம் எனவும் பட்டாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி திருவிழா நடத்தப் படும். அப்போதும், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார் கள். இருவிதமாக திருவிழாக்களை நடத்தவும் கோயில் நிர்வாகம் தயாராக உள்ளது. அரசின் அனு மதியைப் பொறுத்து, திருவிழா நிகழ்வு இருக்கும் என்றனர்.