Published : 24 Apr 2020 07:48 AM
Last Updated : 24 Apr 2020 07:48 AM

மேற்கு மண்டல மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி செல்வதை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள், வணிகர்கள் ஆகியோர் அத்தி யாவசியப் பொருட்களை தடை யின்றி கொண்டு செல்வதைக் கண்காணிக்க, காவல்துறை அதிகாரிகள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மேற்கு மண்டல ஐஜி கே.பெரியய்யா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவைக்கு இன்ஸ்பெக்டர் யமுனா தேவி (செல்போன் எண்: 94981-73173/ வாட்ஸ்அப் எண்:98425-30382), ஈரோட்டுக்கு இன்ஸ்பெக்டர் நாகமணி (செல்போன் மற்றும் வாட்ஸ்அப் எண்: 94981-75478), திருப்பூருக்கு இன்ஸ்பெக்டர் முருகேசன் (செல்போன் மற்றும் வாட்ஸ் அப் எண்: 94438-81000), நீலகிரிக்கு இன்ஸ்பெக்டர் சுஜாதா (செல்போன் மற்றும் வாட்ஸ் அப் எண்: 91592-71426) சேலத்துக்கு டிஎஸ்பி லட்சுமண குமார் (செல்போன் எண்: 94981-69169/ வாட்ஸ் அப் எண்: 99652-61073), நாமக்கல்லுக்கு இன்ஸ்பெக்டர் பெரியசாமி (செல்போன் மற்றும் வாட்ஸ் அப் எண்: 94981-58881), தருமபுரிக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி (செல்போன் மற்றும் வாட்ஸ் அப் எண்: 94981-78825), கிருஷ்ண கிரிக்கு டிஎஸ்பி ராமமூர்த்தி (செல்போன் மற்றும் வாட்ஸ் அப் எண்: 94451-29531) ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காய்கறி, பழங்கள், தானியங் கள், மளிகைப் பொருட்கள், பால், சமையல் எரிவாயு, மருத் துவப் பொருட்கள் ஆகியவற்றை விவசாயிகள், வணிகர்கள் ஆகியோர் எந்தவித தடையு மின்றி எடுத்துச் சென்று, விநியோகம் செய்வதை இவர் கள் கண்காணிப்பதுடன், பொருட் களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், தேவையான உதவிகளை செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x