Published : 24 Apr 2020 07:32 AM
Last Updated : 24 Apr 2020 07:32 AM

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் வரை 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

ஊரடங்கு விலக்கிக் கொள்ளப் படும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும், 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித் துள்ளார்.

தற்போது ஊரங்கு அமலில் இருப்பதால், விடுதிகள், சமைக்க வசதி இல்லாத அறைகளில் தங்கியுள்ளோர் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு இந்த அம்மா உணவகங்கள் பெரும் வரப்பிரசாதமாக உள்ளன. இந்நிலையில் மாநிலம் முழு வதும் உள்ள 658 அம்மா உண வகங்களிலும் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் வரை பொதுமக் களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து சென்னை யில் உள்ள 407 அம்மா உண வகங்களிலும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அனைத்து உணவகங் களிலும் சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய ஒவ் வொரு அம்மா உணவகத்துக்கும் ஓர் அதிகாரியைப் பொறுப்பாக்கி, கண்காணிக்க வேண்டும் என்றும் மண்டல அதிகாரிகளுக்கு அறி வுறுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x