

‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளி யான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர் களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்று சென்னை முகவர்களில் ஒருவரான வேணுகோபால் பேசு கிறார்...
நெற்குன்றத்துல ஒரு டெய்லர் இருக்காரு. முகம்மதுன்னு பேரு. ‘இந்து தமிழ்’ பேப்பரை அரைநாள் படிச்சிட்டு, பின்னர் அதை நூலகக் காப்பி மாதிரி பக்கத்து வீட்டுக்கு சுற்றுல விட்டு ருவாரு. “என்ன தலைவா, நம்ம யாவாரத்தைக் கெடுக்கீங் களே?”ன்னு கேட்டால், “நாளைக் குப் பழைய பேப்பராகிடும் சகோ தரா. அதுக்குள்ள எத்தனை பேருக்குப் பயன்படுதோ, பயன்படட்டுமே” என்பார்.
என்னிக்காவது இந்து தமி ழுக்குப் பதிலா தவறுதலா வேற பேப்பரைப் போட்டுட்டா கோவிச் சுக்குவார். “சின்னப் பொண் ணுக்கு ‘மாயா பஜார்’, பெரிய பொண்ணுக்கு ‘இளமை புதுமை’, மனைவிக்கு ‘பெண் இன்று’, எனக்கு ‘வணிக வீதி’, ‘நலம் வாழ’ பிடிக்கும்னுதான் இந்தப் பேப்பரை வாங்குறேன்னு நினைச் சீங்களா? வீட்ல 2 பெண் பிள் ளைங்க இருக்காங்க. கொலை, கொள்ளை மாதிரியான கெட்ட செய்திகள் பெருசா இந்து தமிழ்ல வராதுன்னுதான் அதை வாங்குறேன்” என்பார்.
“பக்கத்து தெருவுல ஒருத்தர் எழுதுன கட்டுரை நடுப்பக்கத் துல வந்திருக்குது. இஸ்லாமிய பெண்கள் இறந்தால், கூலிக்கு ஆள் பிடிக்காமல் எப்படி குடும் பத்துப் பெண்களே ஜனாசாவை (இறந்தவரின் உடல்) குளிப்பாட்டு வது என்று என்னுடைய மனைவி விழிப்புணர்வு ஏற்படுத்திய செய்தி கூட அதுல வந்திருக்கு. வாசகர் கள் பேப்பரை வாசிச்சுக்கிட்டு இருக்கும்போதே தோணுற கருத்தை, ஒரே போன்ல ‘உங்கள் குரல்’ வழியாச் சொல்லிடலாம்” என்பார்.
உண்மையில் எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்குது. எப்படி ‘இந்து தமிழ்’ ஒவ்வொரு வாசகர்களுடனும் இவ்வளவு நெருக்கமான உறவைப் பேணுதுன்னு!