

மதுவிலக்கு கோரி தமிழகம் முழு வதும் நடந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாக வும், போராட்டத்தையொட்டி கைது செய்யப்பட்ட அனைவரையும் விடு தலை செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக நிர் வாகிகளையும் தொண்டர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இரவோடு இரவாக போலீஸார் கைது செய்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாங் களாகவே முன்வந்து மதுவிலக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:
மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் காவல்துறையினர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடிப் படை உரிமையை பறிக்கும் செயலாகும். போராட்டத்தின்போது கைது செய்யப் பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:
மாணவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும். மதுவிலக்கு போராட்டங்களில் கைதான அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
மதுவிலக்கு கோரி நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற் றுள்ளது. தமிழகம் முழுவதும் பொது மக்கள், வணிகர்கள், உழைப்பாளி மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத் துக்கு ஆதரவளித்தனர். கைதான அனைவரையும் விடுலை செய்வதோடு, அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன்:
முழு அடைப்பு போராட்டத்தை ஒடுக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரி யது. போராட்டங்களில் கைது செய்யப் பட்ட அனைவரையும் உடனடியாக விடு தலை செய்ய வேண்டும். முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. அதில் பங்கேற்ற வணிகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:
மது விலக்கை வலியுறுத்தி நடை பெற்ற முழு அடைப்பு போராட் டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தானாகவே முன்வந்து வணிகர் கள் கடைகளை அடைத்தனர். பொதுமக்கள், வணிகர்கள், இளை ஞர்கள், மாணவர்கள் என அனைத் துத் தரப்பினரும் உணர்வுப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதான அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா:
எங்கள் போராட் டம் அரசியல் காரணங்களுக்காக அல்ல. மக்களின் மனசாட்சியை அறிந்து நாங்கள் மதுவை எதிர்த்து களமிறங்கியுள்ளோம். மக்களின் மனசாட்சியைக் கேட்க அரசு தனது காதுகளை திறக்க வேண்டும். முழு அடைப்பு போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, அருந்ததி மக்கள் கட்சித் தலைவர் வலசை ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் வலியுறுத்தியுள்ளனர்.