ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்கக்கூடாது: தமிழக அரசுக்கு பத்திர எழுத்தர்கள் வேண்டுகோள்

ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்கக்கூடாது: தமிழக அரசுக்கு பத்திர எழுத்தர்கள் வேண்டுகோள்
Updated on
1 min read

ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிரவு அலுவலகங்களை திறக்கக்கூடாது என பத்திர எழுத்தர்கள் அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அத்தியவாசியப் பணிகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் 21 நாட்களாக திறக்கப்படாமல் இருந்த சார் பதிவாளர் அலுவலகங்கள் ஏப். 20 முதல் திறக்கப்பட்டன.

சார் பதிவாளர்கள், ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணிக்கு வருகின்றனர். ஊரடங்கால் ஒன்றிரண்டு பதிவுகளே நடைபெறுகின்றன. இதனால் பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்ட போதிலும் பத்திர எழுத்தர்கள் அலுவலகங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

இதனால் ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலங்களை திறக்கக்கூடாது என பத்திர எழுத்தர்கள் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து ஒத்தக்கடை ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக பத்திர எழுத்தர்கள் கூறுகையில், பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு வருவாய் வரும். அதற்காக மே மாதம் 3 ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து விட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தை மட்டும் முன்கூட்டியே திறப்பதை ஏற்க முடியாது.

பத்திர எழுத்தர்கள் அலுவலகம், தட்டச்சு, ஜெராக்ஸ் கடைகளை திறக்க விடாமல் பத்திரப்பதிவு எப்படி நடத்த முடியும்?

தமிழகம் முழுவதும் தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிக பத்திரப்பதிவுகள் நடைபெறும். இப்போது நூறு பதிவுகள் கூட நடைபெறுவதில்லை. ஊரடங்கு அமலில் இருப்பதால் போக்குவரத்து நடைபெறவில்லை.

அப்படியிருக்கும் போது சொத்தை விற்பவர்கள், வாங்குபவர்கள் எப்படி பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வர முடியும். இது நன்கு தெரிந்தும் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்தது ஏன்? எனவே ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவு அலுவலகங்களையும் மூட வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in