

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியவாசியம் இல்லாமல் திறக்கப்பட்டிருந்த கடைகள், மற்றும் விதிமுறைகளை மீறிய பழக்கடை ,சலூன் கடைகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் என பல்வேறு நாடுகளிலும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா உட்பட தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது.
இதனை அடுத்து தமிழக அரசு சார்பிலும் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியவாசியம் இல்லாமல் திறக்கப்பட்டிருந்த கடைகள், மற்றும் விதிமுறைகளை மீறிய பழக்கடை ,சலூன் கடைகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.