

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோருக்கு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப் படுகின்றன. இந்நிலையில், நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆய்வக நுட்புனர்கள், கணினி இயக்குவோர் உள்ளிட்ட அனைத்து ஊழியர் களுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் முதல் நாள் காலை, 2-வது நாள் இரவு, அதன்பின் தொடர்ந்து வாரம் ஒரு மாத்திரை என 7 வாரங்களுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
மாத்திரைகளை மொத்தமாக வழங்காமல், முதலில் 2 மாத்திரைகளும் அதன்பின் வாரம் ஒரு மாத்திரையும் வழங்கப்படுகிறது என்று கூறினர்.