

கரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்களின் வாடகை வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கரோனா சிகிச்சைப் பணியில் இருப்பவர்களை வீட்டைக் காலிசெய்யுமாறு வீட்டின் உரிமை யாளர்கள் வற்புறுத்தி வருவதாகஅரசுக்கு புகார்கள் வந்தன.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களை வீடுகளை காலி செய்ய வற்புறுத்துவது பொது சேவையில் ஈடுபடுவோரை பணி செய்யவிடாமல் தடுப்பதாகும். புகார்கள் வரும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்கள் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகராட்சி ஆனையர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.