தமிழக பாஜக சார்பில் 6.37 லட்சம் பேருக்கு உணவுப் பொருட்கள்: மாநிலத் தலைவர் எல்.முருகன் தகவல்

தமிழக பாஜக சார்பில் 6.37 லட்சம் பேருக்கு உணவுப் பொருட்கள்: மாநிலத் தலைவர் எல்.முருகன் தகவல்

Published on

தமிழகம் முழுவதும் பாஜக சார் பில் இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவுப் பொருட்களும், 32 லட்சம் உணவுப் பொட்டலங்களும் வழங்கப் பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவிக நகரில் பாஜக மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் இல்லத்தில் ஏழைகளுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியை பார்வை யிட்ட எல்.முருகன், பின்னர் கூறிய தாவது:

கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘மோடி கிட்’ வழங்குதல், ‘மோடி கிச்சன்’ என்ற பெயரில் உணவுப் பொட்டலங்கள் வழங்குதல், முகக் கவசம், கிருமி நாசினி வழங்குதல் போன்ற பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏப்ரல் 19 வரை தமிழகம் முழு வதும் 32 லட்சத்து 10 ஆயிரத்து 490 உணவுப் பொட்டலங்கள், 6 லட்சத்து 37 ஆயிரத்து 868 பேருக்கு உணவுப் பொருட்கள், 8 லட்சத்து 69 ஆயிரத்து 433 முகக் கவசங்கள் மற்றும் கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. ‘பிஎம் கேர்ஸ்’நிதிக்கு 38,187 பாஜகவினர் நன்கொடை வழங்கியுள்ளனர். 4 லட்சத்து 25 ஆயிரத்து 648 பேர் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in