

தேனி மாவட்டம், டி.கல்லுபட்டி யைச் சேர்ந்தவர் பூசாரி நாகமுத்து. இவர் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர், 8-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக் கில் பெரியகுளம் நகராட்சித் தலை வரும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சித் தலைவர் வி.எம். பாண்டி, மணிமாறன், ஞானம் என்ற ஞானசுப்பிரமணி, லோகு என்ற லோகநாதன், சரவ ணன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் சாதி பெயரை சொல்லி திட்டியதாக மேலும் ஒரு சட்டப் பிரிவின் கீழ் ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஓ.ராஜா தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீனில் சென்றார். சாதியை சொல்லி திட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதால், இவ்வழக்கு விசாரணை பெரிய குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து, தேனி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து, நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராக ஓ.ராஜா, பாண்டி, மணி மாறன், ஞானசுப்பிரமணி உள்ளிட்ட 7 பேர் தேனி மாவட்ட நீதிமன்றத் துக்கு வந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வி.சிவஞானம் இவ்வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தடை உத்தரவு பெறப்பட்ட நகல் இருக்கிறதா? என அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ.வெள்ளைச்சாமி மற்றும் ஓ.ராஜா தரப்பு வழக்கறிஞர் சந்திரன் ஆகியோரிடம் கேட்டார். இருவரும் இல்லையென பதில் கூறியதையடுத்து இவ்வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.