விவசாயிகளுக்கு உதவ மாவட்டந்தோறும் பொறுப்பு அதிகாரிகள்: காவிரி டெல்டா பாசன விவசாய சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை

விவசாயிகளுக்கு உதவ மாவட்டந்தோறும் பொறுப்பு அதிகாரிகள்: காவிரி டெல்டா பாசன விவசாய சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை
Updated on
1 min read

திருச்சி சரகத்தில் அமைக்கப்பட்டுள்ளதுபோல தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு உதவ மாவட்டத்துக்கு ஒரு காவல் அதிகாரியைப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி. இளங்கீரன் தமிழக காவல்துறைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைத் தடையின்றி எங்கும் எடுத்துச் செல்ல ஏதுவாக விவசாயம் சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரால் அவர்களுக்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் உடனடியாக முறையிட திருச்சி சரகத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டிஎஸ்பி அந்தஸ்திலான ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து திருச்சி சரக டிஐஜியான பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் கெடுபிடிகளால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் இந்த அதிகாரிகளையோ அல்லது கரோனா சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தொடர்பு கொண்டால் அவர்களின் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது.

திருச்சி சரக டிஐஜியின் இந்த ஏற்பாடு விவசாயிகளுக்கு மிகுந்த பயனை அளிக்கிறது. எனவே, இதே வழியில் விவசாயிகளுக்கு உதவ தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் டிஎஸ்பி அந்தஸ்திலான பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று இளங்கீரன் தமிழக காவல்துறைத் தலைவருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in