

‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளி யான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர் களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்று தஞ்சை முகவரான எஸ்.செந்தில்குமார் பேசுகிறார்.
தஞ்சை கிழக்கு பகுதியில் மட்டும் 2,500 ‘இந்து தமிழ்’ வாசகர்கள் இருக்காங்க. அதுல கிங்ஸ் பொறியியல் கல்லூரி நூலகர் சீனிவாசன் முக்கியமானவர். கல்லூரி நூலகம், மாணவர் விடுதி, மாணவிகள் விடுதி மட்டுமின்றி, தன்னோட வீட்டுக்கும் ‘இந்து தமிழ்’ வாங்குறாரு. ‘சொந்த வீடு’ இணைப்பிதழ்ல வர்ற முக்கியமான கட்டுரைகளை எல்லாம் வெட்டி நோட்டீஸ் போர்டுல ஒட்டுவாரு. கூடவே, வேலைவாய்ப்புச் செய்திகள், 8-ம் பக்கம் வருகிற பொன் மொழி, பொது அறிவுத் தகவல், நடுப்பக்கத்தில் வருகிற பொறியாளர் ராமநாதனின் கட்டுரை எல்லாத்தையும் நோட்டீஸ் போர்டுல போடுவாரு. அந்தச் செய்திகள் எல்லாம் தொடர்ந்து ஒரு வாரம் நோட்டீஸ் போர்டுலேயே இருக்குங்கிறதால, 1,200 மாணவர்களும் கண்டிப்பா பார்த்திடுவாங்க. சிலர் தலைப்பை மட்டும் பார்த்திட்டு, ‘இந்து தமிழ்’ இணையதளத்துல போய்ப் படிச்சுக்குவாங்க. ‘இந்து தமிழ் திசை’ வெளி யீடுகளான புத்தகங்களை
யும் நூலகத்துக்கென வாங்கியிருப்பதோடு, அந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டிய அவசியம் பற்றி மாணவர்களிடமும் சொல்லுவார்.
“எங்கள் கல்லூரி மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்தியதில் ‘தமிழ் இந்து’க்கு முக்கியப் பங்குண்டு” எனப் பெருமையாச் சொல்லுவாரு. சாரோட தம்பி, சத்தியநாராயணன் சரபோஜி கலைக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்ங்கிறதால, அவரும் நிறைய மாணவர் களுக்கு ‘தமிழ் இந்து’வை அறிமுகப்படுத்தியிருக்கார்.