

தமிழகத்தில் 76 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 18 ஆனது.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதை கடைபிடிப்பதில்லை.
இதனால் நோய்த்தொற்று பரவுதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் மற்றும் பிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது.இந்தநிலையில் பொது சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பு:
*தமிழகத்தில் நேற்றுவரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 972 பேர்.
* 28 நாட்கள் தனிமைப்படுத்துதலை பூர்த்தி செய்தவர்கள் 87ஆயிரத்து159 பேர்.
*தற்போது தனிமையில் இருப்பவர்கள் 22 ஆயிரத்து 254 பேர்.
* அரசு கண்காணிப்பில் இருப்பவர்கள் 145 பேர்.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரி 53045.
* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்கள் எண்ணிக்கை 47168.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 6060 .
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 76.
* இன்றைய மொத்த எண்ணிக்கை 1596 .
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 178 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 635 பேர்.
* இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1. மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று 76 எண்ணிக்கையில் அதிகபட்சமாக 55 தொற்றுகள் சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 303 ஆக இருந்த தொற்று 55 எண்ணிக்கை அதிகரித்தது மூலம் 358 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை 134 ஆகவும், திருப்பூர் 109 ஆகவும், திண்டுக்கல் 76 ,ஈரோடு 70 என்கிற எண்ணிக்கையுடன் உள்ளது.