Last Updated : 21 Apr, 2020 04:50 PM

 

Published : 21 Apr 2020 04:50 PM
Last Updated : 21 Apr 2020 04:50 PM

கரோனா ஊரடங்கில் அதிகரிக்கும் விழிப்புணர்வு குறும்படங்கள்: மக்கள் வரவேற்பு எப்படி?- காவல்துறை விளக்கம்

மதுரை

கரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்க ஒரே வழி ஊரடங்கு மட்டுமே என, மத்திய அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கை எடுத்தது. மாநில அரசுகளும் 144 தடை உத்தரவை பிறபித்தது. ஊரடங்கு, தடை உத்தரவை அமல்படுத்துவதில் காவல்துறையினர் தீவிரம் காட்டுகின்றனர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போலீஸாரின் நடவடிக்கையை மீறி, மக்கள் வெளியில் வருவோருக்கு வேறு வழியின்றி சில நூதன தண்டனைகளை வழங்கினாலும் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பதில்லை.

காவல், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினரும், சமூக ஆர்வலர்களும் குழுவாக இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

கிராமியக் கலைஞர்கள், வில்லிசைக் குழுவினர் போன்றோரும் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவற்றை தாண்டி காவல்துறையினர் உள்ளிட்டோர் 3 அல்லது 5 நிமிட விழிப் புணர்வு குறும்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உத்தி அதிகரித்துள்ளது.

மதுரை நகர் காவல்துறை நடிகர் சசிக்குமாரை வைத்தும், மாநகராட்சி பின்னணி பாடகர் மதிச்சியம் பாலாவை இடம் பெறச் செய்தும் கரோனா குறும்படம் தயாரித்துள்ளனர்.

மதுரை புறநகர் காவல்துறை தனது குடும்பம், குழந்தைகள் தவிர்த்து பணி யாற்றுவது பற்றிய குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வைரலாக்கி விழிப்புணர்வு அடைய செய்கின்றனர். இந்த குறும்படங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெறுகிறது என்கின்றனர் காவல்துறையினர்.

மதுரை நகர் காவல் துறையில் குறும்பட தயாரிப்பில் ஆர்வம் கொண்ட எஸ்.ஐ சிவராமகிருஷ்ணன் கூறியது: மதுரை நகர் காவல்துறை சார்பில், கரோனா விழிப்புணர்வுக்கென 2 குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு படங்கள் வெளியாக உள்ளது. நடிகர் சிசிக்குமார் தன்னார்வலராக வந்து, ஒரு விழிப்புணர்வு படத்தை நடித்து கொடுத்தார். இது யூடிப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானபோது, 3 மணி நேரத்தில் மூன்றரை லட்சம் பார்த்துள்ளனர். கரோனா ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு கருவியே செல்போன்கள்.

எந்த நேரமும் அதில் மூழ்கி இருப்பதால் இது போன்ற குறும்படங்கள், இளைஞர்கள், மக்களுக்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்புகிறோம். தனிநபர் குறும்படங்களைவிட, நடிகர், பாடகர்களை வைத்து வெளியிடும் குறும்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

எப்படியாவது கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கில் விழிப்புணர்வு குறும்படங்கள் அதிகரிக்கிறது, என்றார்,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x