தூத்துக்குடியில் நரிக்குறவர் குடும்பங்களுக்கு அதிமுக எம்எல்ஏ உதவி

தூத்துக்குடியில் நரிக்குறவர் குடும்பங்களுக்கு அதிமுக எம்எல்ஏ உதவி

Published on

தூத்துக்குடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவர் குடும்பங்களுக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே 30 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

அவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரான, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதேபோல் லூசியா நகரில் வசிக்கும் 30 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கும் சண்முகநாதன் எம்எல்ஏ தலை 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in